பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு மீண்டும் வருகிறார்.! ஏன் தெரியுமா?..

0
77

உத்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று ராமர் கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். முன்னதாக தமிழ்நாடு வந்த மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை திறந்து வைத்தார். பின்னர், தமிழ்நாட்டில் உள்ள ராமர் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.இந்த நிலையில் பிரதமர் மோடி, அடுத்த மாதம் சென்னைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here