Rajini paid tribute to Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று (டிச.28) அவர் காலமானார். தற்போது விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், தொண்டர்கள், சினிமா பிரபலங்களும், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுதியுள்ளார்.
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். அன்பு நண்பரை இழந்தது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அசாத்திய மன உறுதியுள்ள மனிதர். அவர் உடல்நலம் தேறி வந்துவிடுவார் என நம்பினோம்.
சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் சோர்வாக விஜயகாந்தை பார்த்ததும் வருந்தினேன். விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார். மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார். தமிழ்நாட்டு மக்கள் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டனர்” என வேதனைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘விஜயகாந்த் உடலை பார்த்து கண்கலங்கிய விஜய்!