ராமர் கோவில் திறப்பு விழாவில் ரஜினி..!

0
81

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில்
கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று வருகிறது. ராமர் சிலை
பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோதி ‘ராம் லல்லா’ எனப்படும் குழந்தை ராமரின்
சிலையை பிரதிஷ்டை செய்தார். முன்னதாக பூஜை பொருட்கள், பட்டு
வஸ்திரங்களுடன் கோவிலுக்குள் வந்த பிரதமர் மோதி, தற்போது அங்கு
சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டார்.

வழிபாட்டுக்குப் பின்னர் பால ராமர் சிலையின் கண்களில் மூடப்பட்டிருந்த
துணி அகற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்வையொட்டி,
கோவிலை சுற்றி ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோதி ‘ராம் லல்லா’ எனப்படும்
குழந்தை ராமரின் சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்த நிகழ்வில் நடிகர்
ரஜினிகாந்த் கலந்துகொண்டு ராமரை வழிபட்டார்.

முன்னதாக ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள நடிகர்
ரஜினிகாந்த்திற்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நேற்று
சென்னையில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார்.

மேலும், நடிகர் தனுஷுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தனுஷும்
தனது மகன்களுடன் நேற்று சென்னையில் இருந்து ரஜினி வந்த அதே
விமானத்தில் அயோத்திக்குப் புறப்பட்டார்.

இந்த நிலையில், இன்று இருவரும் ராமர் திறப்பு விழாவில்
கலந்துகொண்டு ராமரை வழிபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here