அதிமுக துணைத்தலைவர் இருக்கையில் ஆர்.பி.உதயகுமார்..! ஓபிஎஸ் இடமாற்றம்..!

0
123

எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி ஆர்.பி. உதயக்குமாருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவையில், எதிர்க்கட்சி துணை தலைவருக்கான இருக்கை எதிர்க்கட்சி தலைவரின் இருக்கை அருகிலேயே இருக்க வேண்டும் என சபாநாயகருக்கு எடப்பாடி கடிதம் எழுதியிருந்தார். இதுவரை அந்த இருக்கையில் ஓபிஎஸ் அமர்ந்திருந்தார்.

இது குறித்து அதிமுக தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விஷயத்தில் சபாநாயகர் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.

தொடர்ந்து, நேற்று முன்தினம் நடந்த சட்டப்பேரவையில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் என இருக்கை விவகாரம் குறித்து எடப்பாடி பேசினார்.

இதற்கு, எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டு, 2ஆவது வரிசையில் முன்னாள் பேரவைத் தலைவர் தனபாலுக்கு அருகில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here