‘கடைசி தமிழன் உள்ளவரை கேப்டன் உயிருடன் இருப்பார்’ – சீமான் இரங்கல்!

0
112

Seeman paid tribute to Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று (டிச.28) அவர் காலமானார். தற்போது விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், தொண்டர்கள், சினிமா பிரபலங்களும், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் பேசுகையில், “திரையுலகில் தனது புரட்சிகரமான நடிப்பால் புரட்சி கலைஞர் என பெயர் பெற்றவர் கேப்டன் விஜயகாந்த். அவர் ஒரு சிறந்த போராளி என்பதற்கு சான்று, தமிழ் ஈழம் மற்றும் காவிரி விவகாரம் பிரச்சினைகளுக்கு கேப்டன் சினிமா துறையினரை அழைத்து போராட்டம் நடத்தினார்.

கேப்டன் பசியை உணர்ந்தவர், பட்டினிக் கிடந்தவர் ஆனால் அவரால் பசி ஆற்றப்பட்டவர்கள் பல ஆயிரம் பேர் இருக்கின்றனர். அவர் படிக்கவில்லை, ஆனால் அவரால் படித்தவர்கள் ஏராளம் பேர் இருக்கின்றனர்.

கேப்டன் நம்முடன் இல்லை என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. மாபெரும் தலைவர்களால் இருந்த கலைஞர், ஜெயலலிதா இருக்கும்போது அவர்களை எதிர்த்து துணிந்து அரசியலை ஆரம்பித்தவர் கேப்டன்.

மழையோ, புயலோ, பனியோ எதையும் கடந்து செல்லக்கூடியவர். பல இரவுகள் தூங்கமல் நடித்த கடும் உழைப்பாளி. அவரை போல யாராலும் நடிக்க முடியாது. எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர். நம்மை போல் சினிமாவில் யாரும் சிரமப்படக்கூடாது என எண்ணி பல இளம் இயக்குநர்கள், நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் கேப்டன்.

கேப்டன் ஒரு அமைச்சராக இருந்து மனுக்களைப் பெற்று மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்ததை விட ஒரு நடிகராக இருந்து மனுக்கள் பெற்று மக்களின் பிரச்சினைகளைத் திர்த்தவர் விஜயகாந்த். இவர், மண்ணை விட்டு பிரிந்தாலும், மக்கள் மனதில் என்றும் இருப்பார்.

நாட்டில் கடைசி தமிழன் உள்ளவரை கேப்டன் நினைவு இருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தொண்டர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க: Rajini paid tribute to Vijayakanth: ‘விஜயகாந்த் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here