Semester Exam Result: சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் எம்.சி.ஏ, எம்.பி.ஏ பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிகள் வெளியாகவுள்ளன.
2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான செமஸ்டர் தேர்வு, கடந்த ஆண்டு செப்டம்பர் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற்றது. இந்த தேர்வை, தொலைதூர கல்வி நிறுவனத்தில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர்.
இந்த நிலையில், இதற்கான தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள், மாலை 6 மணிக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.
ஆகையால், தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை அறியலாம் என சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: யுவன் இசையில் நாளை ரிலீஸாகும் ‘கருடன்’ பட பாடல்..! வெயிட்டிங்கில் ரசிகர்கள்..!