‘எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்றாங்க சார்’..! பெற்றோர் மீது மகன் புகார்..!

0
148

சேலத்தில் தனக்கு 25 வயதாகியும் திருமணம் செய்து வைக்க மறுக்கும் தனது பெற்றோர் மீது இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “எனக்கு 25 வயது ஆகிவிட்டது. ஆனால் எனக்கு திருமணம் செய்து வைக்க எனது பெற்றோர் மறுக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகாரைப் பார்த்த காவல் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து, புகார் அளித்த இளைஞரின் பெற்றோரை காவல் துறையினர் அழைத்து விசாரித்தனர்.

அப்போது அந்த இளைஞரின் பெற்றோர், “எங்கள் மகன் இதுவரை எந்த ஒரு வேலைக்கும் போகவில்லை. இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்தால் வேலைக்குச் செல்வதாக கூறினார். அதை நம்பி நாங்களும் வாகனம் வாங்கி கொடுத்தோம்.

ஆனாலும் வேலைக்குப் போகவில்லை. இப்படி இருக்கும் இவனுக்கு எப்படி திருமணம் செய்து வைப்பது என்று நாங்கள் யோசிக்கிறோம்” என பெற்றோர் காவல் துறையினரிடம் கூறினர்.

இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞரை அழைத்த காவல் துறையினர், “முதலில் வேலைக்குப் போகவேண்டும். நல்ல வேலைக்கு சென்றால் பெற்றோர் நல்லபடியாக உனக்கு திருமணம் நடத்தி வைப்பார்கள்” என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்காக காவல் நிலையத்தை நாடி தங்களது புகார்களை வழங்கி வரும் நிலையில் தனக்கு திருமணம் நடத்தி வைக்க மறுக்கும் தனது பெற்றோர் மீது புகார் அளித்த சம்பவம் வேடிக்கையாக இருப்பதாக கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here