தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

0
159

Special Buses: சென்னையில் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு இன்று (மார்ச் 07) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் சிவராத்திரி மற்றும் முகூர்த்த தினம் 8ஆம் தேதி வருகிறது. அதனைத் தொடர்ந்து மார்ச் 9, 10ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு வார விடுமுறை தினங்கள் உள்ளது.

இதனால், சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கும், பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கும் பயணிகள் அதிகளவில் பயணம் செய்ய இருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளில் இருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (மார்ச் 7) 270 பேருந்துகளும், நாளை (மார்ச் 8) 390 பேருந்துகளும் இயக்கப்பட்ட இருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழைகளான மார்ச் 9, 10 ஆகிய தேதிகளில் 430 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோன்று, சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மார்ச் 8, 9ஆம் தேதிகளில் 70 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதேபோன்று, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதனால், மொத்தம் ஆயிரத்து 360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.

தொடர்ந்து, விடுமுறையை முடித்துவிட்டு ஞாயிறு அன்று தங்களது சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் சென்னை, பெங்களூரு திரும்ப இருக்கும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன,

பேருந்து நிலையங்களில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக பயணிகள் தங்களது பயணச்சீட்டை www.tnstc.in என்ற இணையதளத்திலும், செல்போன் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here