தமிழ்நாட்டில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

0
75

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் வரும் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு திறக்கப்படவுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு நாட்டின் மிக முக்கிய நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ராமர் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். முன்னதாக ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏதுவாக விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதன் மூலம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ராமர் கோவிலுக்கு வந்து செல்ல முடியும்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, “தற்போதுள்ள நிலவரப்படி, அயோத்தி ராம் ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு, 100 ரயில் சேவைகளை இயக்க முடியும்.

அதனால் திருப்பூர், ஈரோடு, சேலம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், , மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு, 34 சிறப்பு ரயில்களை இயக்க, ஐ.ஆர்.சி.டி.சி., திட்டமிட்டுள்ளது.

மேலும், இதற்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள், வரும் ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இது குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here