மதுரையில் விஜயகாந்த்திற்கு முழு உருவசிலை?.. கோரிக்கைக்கு பதில் அளித்த மேயர்!

0
217

Captain Vijayakanth: மதுரையில் கேப்டன் விஜயகாந்திற்கு சிலை வைக்க வேண்டும் என தேமுதிக உறுப்பினர்கள், பொதுமக்கள், எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர் கோரிக்கை விடுத்த நிலையில் இது பரிசீலிக்கப்படும் என மதுரை மேயர் தெரிவித்துள்ளார்.

மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் (டிச.29) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு அவரது சொந்த ஊரான மதுரையில் முழு உருவசிலை வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், சிலை அமைப்பது குறித்து மாவட்ட அமைச்சர்களிடம் கலந்தாலோசித்து தமிழக அரசிடம் தெரிவிக்கப்படும் எனவும் மேயர் தெரிவித்துள்ளார். மேலும், விஜயகாந்திற்கு சிலை வைக்கக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை மேயருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘ஊமை விழிகள் பார்ட் 2’ – AI மூலம் உயிர் பெறும் விஜயகாந்த்..! ரசிகர்கள் உற்சாகம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here