‘வாரிசுகளுக்கே அரியணையா?’ – ஆளுநர் தமிழிசை விமர்சனம்..!

0
125

திமுக இளைஞர் அணியின் 2ஆவது மாநில மாநாடு, சேலம் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “உரிமை மீட்பு மாநாடாம்? காவிரி உரிமையை தொலைத்தது யார்? கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? ஜல்லிக்கட்டு உரிமையை இழந்தது யார்? கல்வி உரிமையை பறிகொடுத்தது யார்?

‘நீட்’ தேர்வு வர ஆரம்பித்தது யார் காலத்தில்? உரிமைகளை தொலைத்தவர்களே இன்று உரிமை மீட்பு மாநாடு நடத்துகிறார்களாம். வாரிசுகளுக்கே அரியணையா? இவர்களிடம் இருந்து நம் உரிமையை மீட்டெடுப்பது யார்?” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here