‘இனி 10ஆம் வகுப்பில் 600 மார்க் எடுக்க வேண்டும்’ – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

0
121

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், கனிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர். ஐந்து பாடங்களுக்கு 100 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 500 மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது இதில் புதிதாக ஒரு மாற்றம் செயல்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் விருப்பப் பாடத்திற்கும் சேர்த்து தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அரசாணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை தொடர்ந்து தேர்வு முறையில் பள்ளிக் கல்வித்துறை இந்த மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

அந்த வகையில் இந்த புதிய அறிவிப்பின்படி, தமிழ் அல்லாத சிறுபான்மை மொழியை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள் இனி விருப்பப் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

விருப்ப பாடங்களை எழுதும் மாணவர்களுக்கு மட்டும் ஆறு பாடங்களுக்கு தலா 100 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 600 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும்.

விருப்பப் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் 35ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அரசாணையில் வெளியிட்டுள்ளது. மேலும், மாணவர்களின் விருப்பப் பாடங்களில் பெறும் மதிப்பெண்களும் இனி வரும் சான்றிதழில் அச்சிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதில், தமிழைத் தாய்மொழியாக கொண்டு விருப்பப் பாடம் தேர்வு செய்யாத 10ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போதுள்ள வழக்கத்தின்படி ஐந்து பாடங்களில் தேர்ச்சிப் பெற்றாலே போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு இதுவரை உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த கல்வி ஆண்டிலிருந்து தான் இந்த புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறைகள் அடுத்த கல்வி ஆண்டிலிருந்து தான் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here