இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தளபதியின் 68ஆவது படமான ‘The Greatest of all Time’ படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் ஹைதராபாத்தில் தீவிரமாக நடைபெற்று வந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது சென்னை கோவளத்தில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையறிந்த ரசிகர்கள், ஷூட்டிங் ஸ்பாட்டில் குவியத் தொடங்கினர். ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு ‘தளபதி தளபதி’ என கோஷம்போட தொடங்கினர்.
இதனையறிந்த நடிகர் விஜய் தனது ரசிகர்களைப் பார்ப்பதற்காக அங்கிருந்த வேனில் ஏறி ரசிகளைப் பார்த்து கை அசைத்தார். இதன் வீடியோ சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், தனது ரசிகர்கள் பட்டாளத்தைக் கண்டு மகிழ்ச்சியோடு ரசிகர்களைப் பார்த்து விஜய் கை அசைக்கும் காட்சிகளை ‘The Greatest of all Time’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ எடுத்து அதனை ‘For the love of the man TheGreatestOfAllTime shoot diaries!’ என்ற பெயரில் யூடியூப்பில் வெளியிட்டுள்ளது.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக இதேபோல நடிகர் விஜய் தனது ரசிகர்களை வேன் மீது ஏறி கை அசைத்த நிலையில், தற்போது மீண்டும் அதே இடத்தில் குவிந்த ரசிகர்களைக் கண்டு மகிழ்ந்தார்.
விஜய்யைக் காண வந்த ரசிகர்கள் கையில் மாலையுடன் வந்த நிலையில் அந்த மாலையை வேன் மீது நின்றிருந்த விஜய் மீது தூக்கி வீசுகின்றனர், அதனைக் கண்ட விஜய் ‘ஏன் இதெல்லாம்’ என உரிமையோடு கேட்டு மகிழும் காட்சிகள் வெளியானது.