‘The Kerala Story’ – ஒருவழியாக ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த Zee 5..!

0
136

‘The Kerala Story’: இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம் ‘தி கேரளா ஸ்டோரி’. விபுல்ஷா தயாரிப்பில் கடந்த ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு பல இடங்களில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

மதம் சார்ந்த படத்தினால் ஏற்பட்ட இந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்த படம் ரூ.240 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில், 32ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளாக மாற்றப்படுவது போன்று சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என கூறி பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இருந்தபோதிலும், அனைத்து திரையரங்குகளிலும் காவல் துறையினர் பாதுகாப்போடு இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது. மேலும், இந்த படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்தன. அவற்றையெல்லாம் தாண்டி படம் ரிலீஸ் ஆகியது.

இந்த நிலையில், தற்போது இந்த படம் ZEE 5ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. முன்னதாக இந்த படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் படம் வெளியாகவில்லை.

இந்த படம், நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகிற பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி ZEE 5 தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சர்ச்சைகளை தாண்டி இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here