தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம்..!

0
100

TVK: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி தனது அரசியல் பயணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார். தொடர்ந்து, கட்சி சார்ப்பில் பல்வேறு கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.

அதில், இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் கட்சி தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி. நேற்று (மார்ச் 7) கட்சி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், ‘தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம்.

மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர், கழகத் தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள்’ என குறிப்பிட்டு ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ உறுப்பினர் சேர்க்கை அணிக்கு நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இன்று (மார்ச் 8) அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், தவெக செயலியில் கட்சியின் முதல் உறுப்பினராக கட்சியின் தலைவர் விஜய் இணையும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here