தமிழ்நாட்டின் பொறுப்பு முதலமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்?

0
125

‘Udhayanithi Stalin’: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற ஜனவரி 28ஆம் தேதி அமெரிக்கா, லண்டன், பிரானஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்ல இருக்கிறார். தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த பயணம் அமையும் என கூறப்படுகிறது. இந்த பயணத்தில், முதலமைச்சருடன், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் கூட செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் இந்த பயணத்தை முடித்துக்கொண்டு வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி தான் தமிழ்நாடு திரும்புவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் பொறுப்பை தற்காலிகமாக உதயநிதி ஸ்டாலினிடம் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் வெளிநாடு செல்லும் போது பொறுப்பு முதலமைச்சரை நியமிப்பது என்ற வழக்கம் முன்பெல்லாம் இல்லை. ஆனால் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக் காரணமாக தொலை தொடர்பில் தொடர்ந்து இருப்பதால் புதிதாக இந்த தற்காலிகமாக இந்த பொறுப்பு வழக்கப்படலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here