திமுக கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் விபத்தில் உயிரிழப்பு.. உதயநிதி ஸ்டாலின் இரங்கல்..

0
147

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமக இளைஞரணி 2ஆவது மாநில மாநாடு நேற்று (ஜனவரி 21) நடைபெற்றது. பிரமாண்டமாக நடந்த இந்த மாநாட்டில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கலந்துகொண்டார். கூட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது சங்ககிரி அருகேவுள்ள வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இரங்கல் தெரிவித்து தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த கழக உறுப்பினர் தம்பி சதீஷ்குமார், சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, சங்ககிரி அருகேவுள்ள வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

பூத் கமிட்டி உறுப்பினராக ஆக்கப்பூர்வமாக கழகப் பணிகளில் ஈடுபட்டு வந்த தம்பி சதீஷ்குமாரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு கழகம் என்றும் துணை நிற்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here