திமுக தலைமை கழகப் பேச்சாளர்கள் 350 பேருக்கு இன்று உதயநிதி ஸ்டாலின் மற்றும் திருச்சி சிவா எம்பி ஆகியோர் கலந்துகொண்டு பேச்சாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினர்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நாட்டுக்காக வாளேந்திய வீரர்களைப் போல தி.மு.கழகத்துக்காக சொல்லேந்திய வீரர்கள் நம் கழக பேச்சாளர்கள்.
கடுமையான சோதனைகளையும், நெருக்கடிகளையும் சந்தித்தப் பிறகும் கழகம் வலுவோடுத் திகழத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் நம் கழக பேச்சாளர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் முக்கியக் காரணம்.
மாறிவரும் நவீன உலகில் நமது பிரச்சாரங்களும் உரைகளும் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.
ஆயிரமாயிரம் மேடைகள் கண்ட மூத்தப் பேச்சாளர்களும், வளர்ந்து வருகின்ற இளம் பேச்சாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவர்கள் அனைவருக்கும் என் அன்பும், வாழ்த்தும். நம் பேச்சாளர் பெருமக்களுக்கு கழகம் என்றும் துணை நிற்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.