‘ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம் தான்’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

0
134

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞர் அணியின் 2ஆவது மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி ஆகியோர் திமுக இளைஞரணி மாநாட்டை கொடி ஏற்றி தொடங்கி வைத்தார்.

திமுக இளைஞர் அணியின் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தீர்மானங்களை வாசித்தார். ஆளுநர் பதவி நீக்கம், நீட் தேர்வு ரத்து உட்பட 25 தீர்மானங்கள் திமுக இளைஞரணியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் முன்னின்று செயலாற்றி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றியடைய வேண்டும்.

இதற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து, ‘ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்’ என்ற வரலாற்று மரபின் தொடர்ச்சியை நிரூபிக்கும். 25 தீர்மானங்கள் திமுக இளைஞர் அணியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

அந்த வகையில், திமுக இளைஞரணி மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டும் என சூளுரைக்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here