UPSC Exam: தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதாக அறிவித்தது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது.
மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கிடையே, நடப்பாண்டின் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு மே 26-ம் தேதி நாடு முழுதும் நடத்திட திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முதன்மை தேர்வுகளை ஜூன் 16ஆம் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.