விஜயகாந்த் மறைவு: ‘என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா’.. கதறி அழுத நடிகர் விஷால்!..

0
129

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (டிச.28) காலை 6:10 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். விஜயகாந்த்தின் மறைவிற்கு பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் விஷால், விஜயகாந்த்தின் இறப்பிற்கு கண்ணீர் மழ்க தனது இரங்கல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “என்னை மன்னித்து விடுங்கள் அண்ணன். இந்த நேரத்தில் உங்களுடன் நான் இருந்திருக்க வேண்டும். உங்கள் காலை தொட்டு கும்பிட்டு இருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்தது என் தவறுதான்.

உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த சமுதாயத்திற்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறீர்கள். அரசியல்வாதியையோ, நடிகர் சங்க முன்னாள் தலைவரையோ இழந்ததை விட ஒரு நல்ல மனிதரை நாங்கள் இழந்து விட்டோம் என்பதை தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை” எனக் கதறி அழுது தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.

இதையும் படிங்க: கேப்டன் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here