Indian Car of the Year 2024: இந்தியாவில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த அறிமுக கார் என்ற போட்டியில் ‘Hyundai Exter SUV’ கார் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த ஆண்டுக்கான சிறந்த கார் விருதைப் பெற்றுள்ளது.
Hyundai நிறுவனத்தின் Exter SUV காருக்கு 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த அறிமுக கார் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த சப் 4 மீட்டர் SUV காருக்கு இந்தியாவில் இதுவரை மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில், 2024 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கார்களில் சிறந்த கார் எது? என்ற போட்டி நடைபெற்றது.
இதில், Hyundai Exter SUV, Maruti Suzuki Jimny, Honda Elevate, Toyota Innova Hycross, Citroen C3 Aircross, Hyundai Verna, Mahindra XUV 400, MG Comet ஆகிய கார்கள் போட்டிபோட்டன.
இந்நிலையில், Hyundai Exter காருக்கு சிறந்த அறிமுக கார் என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. 18 ஆட்டோமொபைல் பத்திரிகையாளர்கள் அடங்கிய குழுவில் ஒவ்வொரு பத்திரிக்கையாளருக்கும் 25 புள்ளிகள் கொடுக்கப்பட்டன.
இவற்றில் அவர்கள் ஒரு காருக்கு அதிகபட்சம் 10 புள்ளிகள் வழங்கலாம். மொத்தம் 5 கார்கள் பங்கெடுத்த இந்த போட்டியில் Hyundai Exter சிறந்த கார் விருதை பெற்றுள்ளது. வெற்றிபெற்ற Hyundai Exter காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 83 BHP பவர் மற்றும் 113.8NM டார்க் திறன் உள்ளது.
இதனுடன் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 5 ஸ்பீட் AMT டிரான்ஸ்மிஷன் வசதிகளும் உள்ளன. மேலும், 69 BHP பவர் மற்றும் 95.2 NM டார்க் திறன் கொண்ட CNG ஆப்ஷனும் உள்ளது.
மேலும், இந்த காரில் முழு LED லைட்டிங், சன் ரூப், கிளைமேட் கன்ட்ரோல், டூயல் டேஷ்போர்டு, பின்பக்க AC வென்ட்ஸ், வயர்லெஸ் சார்ஜ்ர், 6 ஸ்டாண்டர்ட் ஏர் பேக் வசதிகளும் உள்ளன. இந்தியாவில் இந்த கார் 5.99 லட்சம் ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது.