OnePlus: ஒன்பிளஸ் பிரியர்களுக்கு புதிய அப்டேட்.. ஒன்பிளஸ் 12 மற்றும் 12R சீரியஸ் வெளியீடு தேதி அறிவிப்பு..

0
217

OnePlus Update: இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் போன்கள் ஜனவரி மாதம் வெளியாகும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் இந்த மாதம் தனது பத்தாவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. அந்த வகையில், ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட் போன்கள் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் ஜனவரி 23ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

இந்தியாவில், இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு விற்பனை தொடங்குகிறது. முதல் முறையாக R-சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவை தொடர்ந்து சீனாவிலும் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இது ஒன்பிளஸ் வெளியிட்ட வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது.

அந்த வீடியோவின் போது, ஒன்பிளஸ் ஆர் சீரிஸ் தொடரின் வரலாற்றில் முதல்முறையாக இந்தியா மற்றும் சீனாவிற்கு வெளியே விற்பனைக்கு வரும் என்பதையும் ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியது. இந்த ஸ்மார்ட் போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும், புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனில் மாடலில் அதிக பிரகாசமாக காணப்படும் டிஸ்ப்ளே மற்றும் மெட்டலில் ஆன ஃபிரேம்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்ந்து, இந்த ஸ்மார்ட் போனின் வருகைக்காக காத்திருந்த பயனர்கள். ஒன்பிளஸ் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here