தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

0
84

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், இதன் காரணமாகச் சென்னை மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குச் செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here