வெளுத்து வாங்கும் கனமழை..! இந்த நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

0
126

வளி மண்டல சுழற்சி நிலவும் காரணமாகப் பெய்து வரும் கனமழை காரணமாகத் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளி மண்டல சுழற்சி நிலவும் காரணமாகத் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை மலைக்கிராமத்தில் 28.6 செ.மீ வரை மழைப் பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 25.8 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால், வதால் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவி பழைய குற்றாலம் சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், நாளை (18.12.2023) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை பெய்து வருவதாலும், நாளை மிக கனமழை பொழியும் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களால் நாளை இந்த 4 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here