ஊழல் குற்றச்சாட்டு: ஜப்பானில் ஆளுங்கட்சி தலைவர் புமியோ கிஷிடா ராஜினாமா..!

0
160

டோக்கியோ: ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக ஜனநாயக லிபரல் கட்சியின் தேசிய தலைவர் பதவியை புமியோ கிஷிடா ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் தற்போது ஜனநாயக லிபரல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, தேர்தல் நன்கொடை நிதியை ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த காரணங்களுக்காகச் செலவு செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இது குறித்த விசாரணை நடத்திய பின்னர், நன்கொடை நிதியை ஊழல் செய்ததாகக்கூறி நான்கு அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்தனர். மேலும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய கட்சியின் தேசிய தலைவர் பதவியை புமியோ கிஷிடா ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜப்பானின் பல்வேறு இடங்களில் உள்ள ஜனநாயக லிபரல் கட்சிக்குச் சொந்தமான அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here