ஜப்பானுக்கு ராணுவ உதவி வழங்கிய அமெரிக்கா!

0
111

பாதுகாப்பிற்காக ராணுவ உதவி வேண்டும் என ஜப்பான் நாடு, அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்த நிலையில் அமெரிக்க அரசாங்கம் ராணுவ உதவிகளைச் செய்துள்ளது.

சீனா, வடகொரியா போன்ற நாடுகளிடம் இருந்து ஜப்பான் நாட்டிற்கு அவ்வப்போது அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனைச் சமாளிக்க நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஜப்பான் அரசாங்கம் அமெரிக்காவிடம் இருந்து ராணுவ உதவியை நாடியுள்ளது. இதனையடுத்து, ஜப்பானுக்கு ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

அதன்படி சுமார் ரூ.489 கோடி மதிப்பிலான சைட் வின்டர் ஏவுகணை உள்பட பல்வேறு நவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here