நிக்கராகுவா நாட்டிற்கு ஒரே விமானத்தில் சென்ற 303 இந்தியர்கள்: மனித கடத்தலா?.. போலீஸ் விசாரணை..!

0
71

Nicaragua: நிக்கராகுவா நாட்டிற்கு துபாயிலிருந்து சென்ற ஒரே விமானத்தில் 303 இந்தியர்கள் பயணித்ததால் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துபாயிலிருந்து கடந்த டிச.21ஆம் தேதி நிக்கராகுவா நாட்டிற்குப் பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் பயணித்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கராகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு அந்த விமானம் சென்றுகொண்டிருந்தது.

இதனிடையே, துபாயிலிருந்து புறப்பட்ட விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகவும், தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளதா என்பதை சரிபார்ப்பதற்காகவும் செல்லும் வழியில் பிரான்ஸ் நாட்டின் வட்ரே நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அப்போது, விமானிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். விமான நிலையம் வந்த பிரான்ஸ் காவல் துறையினர், துபாயிலிருந்து ஒரு விமானத்தில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நிக்கராகுவா நாட்டிற்குச் செல்வது குறித்துச் சந்தேகமடைந்து விசாரணை நடத்தினர்.

300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் துபாயிலிருந்து ஒரே விமானத்தில் வெளிநாட்டிற்குச் செல்வது மனித கடத்தல் தொடர்பாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here