ஆஸ்கர் விருது: இந்திய இயக்குநரின் ஆவணப்படம் பரிந்துரை!

0
118

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்படும். உலகம் முழுவதும் இருந்து திரைப்பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில் 96ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதில், இந்தியாவில் இருந்து எந்த படைப்புகளும் தேர்வாகவில்லை என தகவல் வெளியானது. ஆனால் இந்தியாவில் பிறந்த கனடா நாட்டு இயக்குநர் இயக்கிய ‘டு கில் ஏ டைகர்’ என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட பிரிவில் தேர்வாகியுள்ளது.

இதில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமையையும், அதைத்தொடர்ந்து குற்றவாளிகளுக்கு எதிராக சிறுமியின் தந்தை நடத்திய சட்டப் போராட்டத்தையும் மையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிறந்து, தற்போது கனடா நாட்டில் வாழ்ந்து வரும் நிஷா பஹுஜா என்கிற பெண் தான் இந்த ஆவணப்படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார். இந்த படம் பல்வேறு சர்வதேச விழாக்களில் பங்கேற்று மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சினிமாவுக்கு நோ சொன்ன அமீர் கான்.. மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here