OLA ஸ்கூட்டர் வாங்க சரியான நேரம்.. அதிரடி ஆஃபர்களை அறிவித்த நிறுவனம்!

0
101

OLA Electric Scooter: இந்தியாவின் நம்பர் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமாக உள்ள ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தங்களது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்துள்ளது. புதிதாக ஸ்கூட்டர் வாங்க விரும்புபவர்களுக்கு, ஏற்கனவே ஓலா ஸ்கூட்டர்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த ஆஃபர்கள் வழங்கப்படுகிறது.

அப்படி என்ன ஆஃபர்?

ஓலா நிறுவனம் அறிவித்திருக்கும் இந்த சலுகைகள் டிசம்பர் 10ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த சலுகை காலத்தில் வாங்கப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கூடுதல் வாரண்ட்டி என்பது 50 விழுக்காடு குறைந்த விலையில் கிடைக்கும்.

மேலும், பழைய வாடிக்கையாளர்கள், புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கும் ஒவ்வொருவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. அதேபோல கேஷ்பேக் சலுகையாக 3 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

ஓலா நிறுவனம் ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் Ola S1X+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையைக் குறைத்தது. ஒரு லட்சத்து 9ஆயிரத்து 999 லட்சம் ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த டிசம்பர் மாதம் இதன் விலை 20 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஓலா ஸ்கூட்டர் அந்த நிறுவனத்தின் மிகவும் விலை குறைந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த நிறுவனம் 2024ஆம் ஆண்டு புதிய ஓலா பைக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல 2025ஆம் ஆண்டு முதல் காரை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here