தென்கொரியா எதிர்க்கட்சி தலைவர் மீது கத்தி குத்து..!

0
142

தென்கொரியாவில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது எதிர்க்கட்சி தலைவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியா நாட்டின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் தலைவர் லிஜி மியங். இவர், இன்று காலை அந்நாட்டின் புசன் மாகாணம் ஹடியொக் தீவில் புதிதாக கட்டப்பட்டுவரும் விமான நிலையத்தை பார்வையிட்டார்.

அதன் பின்னர், லிஜி மியங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்துக்கொண்டிருந்தார். அப்போது, லிஜி மியங்கின் ஆதரவாளர்போல் வந்த நபர் ஒருவர் ஆட்டோகிராப் வாங்குவதுபோல் அவரை நெருங்கினார்.

அப்போது திடீரென அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லிஜி மியங்கின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த லிஜி மியங் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்த காவல் துறையினர் லிஜி மியங்கை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தொடர்ந்து அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லிஜி மியங் கழுத்தின் இடது பக்கத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, லிஜி மியங் மீது தாக்குதல் நடத்திய நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகை ஜெயப்பிரதாவை தீவிரமாக தேடும் காவல் துறை..! ஏன் தெரியுமா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here