உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: ‘ரூ.26,90,657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்’ முதலமைச்சர் ஸ்டாலின்!

0
164

Tamilnadu Global Invesors Meet 2024: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் மறைமுமாக மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா இன்று ஜன.08 நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் அரசின் இந்த உலக மூதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக, தமிழ்நாட்டினுடைய 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக உங்கள் எல்லோருக்கும் தமிழ்நாட்டின் முதல்வராக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ என்ற பெயரில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலமாக, ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தபட்டது.

நான் ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, 17,371 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிற வகையில், 7,441 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் பெற்றோம். அதோடு, நான் தொடர்ந்து இந்த முதலீடுகள் செயல்வடிவம் பெறுவதை கண்காணிப்பேன்.

ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள திறந்து வைத்திருக்கிறேன். இது மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின்போது, இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்பதை இந்தியாவே உற்றுநோக்கும் அவையில் பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.

இந்த முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இதையும் படிங்க: உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: நிறுவன தலைவர்கள் மகிழ்ச்சி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here