உன்ன வச்சு படம் எடுத்தது ஒரு குத்தமா?.. சிவகார்த்திகேயனால் டென்ஷன் ஆன கமல்..!

0
1673

Kamal Haasan: சினிமா, அரசியல் என இரண்டையும் ஒரே நேரத்தில் கையாண்டு வந்த உலக நாயகன் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். விக்ரம் திரைப்படம் பெரிய அளவில் வெற்றிபெற்றது.

கமலும், மணிரத்னத்தும் இணைந்து ஏற்கனவே நாயகன் படத்தை கொடுத்து பெரும் அடையாளமாக இருக்கிறார்கள். தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதற்கிடையே ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு ஆகியோரது படங்களை கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். இதில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘அமரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த ‘அமரன்’ படமானது ஒரு இந்திய ராணுவ பின்னனியில் நடைபெறும் கதை என கூறப்படுகிறது. இதற்காக காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்றது. தொடர்ந்து, படத்தின் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாகவும் விரைவில் அது நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘அமரன்’ படத்திற்கு கொடுத்த பட்ஜெட்டை தாண்டி அதிக பணம் செலவாகுவதாக தெரிகிறது. இதனால், தயாரிப்பாளரான கமல் ஹாசன், படத்தின் பட்ஜெட்டை குறைக்க முயற்சி செய்யுமாறு படக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், சொன்ன பெட்ஜெட்டை விட அதிகமாக ரூ.25 கோடி செலவாகியுள்ளது. இதனால், கமல்ஹாசன் அப்செட்டாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் பட்ஜெட் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதில், அதிகபட்சமாக சிவகார்த்திகேயன் போர்ஷன்களுக்கு மட்டும் அதிகளவில் செலவாகியதாக கூறப்படுகிறது. இப்படியே போகிட்டு இருந்தா கமலுக்கு கை செலவுக்கு கூட காசு இல்லாம போயிடும்போலையே-னு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here