‘Pa.Ranjith’: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பா.ரஞ்சித். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக இவர் இயக்கும் படங்கள் அமைந்திருக்கும். எதார்த்தமான கதைக்களத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அனைவருக்கும் புரியும் வண்ணம் இவரது படங்கள் அமைந்திருக்கும்.
இவரது முதல் திரைப்படமான ‘அட்டகத்தி’ படம் ரிலீஸாகுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதனையெல்லாம் தாண்டி அந்த படம் ரிலீஸாகி ரசிகர்களிடம் சென்று நல்ல வரவேற்பு பெற்றது.
அடுத்ததாக கார்த்தியை வைத்து இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் ஒரு வெற்றி இயக்குநராக அனைவராலும் அடையாளம் காணப்பட்டார். பின்னர் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கி ‘கபாலி’ படத்தின் மூலம் இவர் ஒரு பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரானார்.
தொடர்ந்து, பல படங்களை இயக்கிய ரஞ்சித் தற்போது விக்ரமை வைத்து ‘தங்கலான்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் மாதல் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, இவரது நீலம் நிறுவனத்தின் மூலம் பட படங்களை தயாரித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து பா.ரஞ்சித் தற்போது ஹிந்தியில் ஒரு படம் இயக்க இருப்பதாகவும், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினர்களின் தலைவரான பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு ‘பிர்சா’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது இந்த செய்தியை மறுத்து பா.ரஞ்சித் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, “நான் கட்டாயம் ஹிந்தியில் இரு படம் இயக்க இருக்கிறேன். ஆனால், அந்த படத்தில் யார் நடிப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது குறித்து விரைவில் அறிவிக்கப்பட்டும்” என தெரிவித்துள்ளார்.