IPL 2024: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49ஆவது லீக் ஆட்டம் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே இன்று இரவு 7:30 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றது. பஞ்சாப் அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளி பெற்றுள்ளது.
எஞ்சிய 5 ஆட்டங்கள் பஞ்சாப் அணிக்கு முக்கியமானதாக இருக்கும். காயம் காரணமாக கடந்த 5 ஆட்டங்களில் கலந்துகொள்ளாத கேப்டன் ஷிகர் தவான் இந்த ஆட்டத்தில் கலந்துகொள்ளுவாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
மேலும், இதுகுறித்து இன்று ஆலோசிக்கப்படும் என அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளர் லாங்வெல்ட் தெரிவித்தார். தொடர்ந்து, தனது வெற்றிக் கனியைப் பறித்து வரும் சென்னை அணி இந்த ஆட்டத்திலும் தனது வெற்றியைப் பதிவு செய்யுமா? என பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
இரு அணிகளும் இன்று உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்த இருக்கும் நிலையில் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை.