TVK Vijay: உலகம் முழுவதும் இன்று (மே 1) உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலரும் தொழிலாளர்கள் தின வாழ்த்து கூறி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மே தினம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு பறைசாற்றுவது இந்த மே தினம்.
இந்த நாளில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ‘மே தின’ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை மனத்தில் கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட உறுதி ஏற்போம்” என குறிப்பிட்டுள்ளார்.