பிரம்மாண்டமாக நடந்த ‘டபுள் டக்கர்’ இசை வெளியீட்டு விழா..!

0
87

‘Double Tuckerr’: தமிழ் சினிமாவில் ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் இதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தீரஜ். இவர் தற்போது மீரா மஹதி இயக்கத்தில் உருவாகும் ‘டபுள் டக்கர்’ படத்தில் நடிக்கிறார். தீரஜுக்கு ஜோடியாக ஸ்முரிதி வெங்கட் நடிக்கிறார்.

இந்த படத்தை ஏர் ஃபிளிக் தயாரிக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக அனிமேஷன் கதாபாத்திரங்களுடன், சினிமா நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் ஃபேண்டசி திரைப்படம் இதுவாகும். இந்தப் படத்திற்காகவே இரண்டு புதுமையான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த படத்தில் கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க நகைச்சுவையாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ‘டபுள் டக்கர்’ படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரை நடிகர் ஆர்யா வெளியிட்டார். யூடியூப்பில் வெளியான டீசர் தற்போது வரை 3M பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று ‘டபுள் டக்கர்’ இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. சுமார் 8ஆயிரம் குழந்தைகளுக்கு முன்னாள் இந்த விழா நடைபெற்றுள்ளது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து, அனிமேஷன் கதாபாத்திரங்கள் இருப்பதால் சிறுவர்கள் மத்தியிலும் நல்ல ரீச் கிடைத்துள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் இந்த புதிய அனிமேஷன் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here