வெளியானது ‘Mr.Zoo Keeper’ படத்தின் முக்கிய தகவல்..!

0
128

‘Mr.Zoo Keeper’: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ். இவர், பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியா ‘1947’ படத்தில் புகழின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில், நடிகர் புகழ் ‘Mr.Zoo Keeper’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தை ஜே.சுரேஷ் இயக்குகிறார். இந்த படத்தில் Zoo Keeper-ஆக புகழ் நடித்திருப்பதால், விலங்குகளுக்கு கிராபிக்ஸ் பயன்படுத்தாமல் உண்மையான காட்டு விலங்குகளுடன் புகழ் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தை J4 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் வெளியான டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் தற்போது படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘Mr.Zoo Keeper’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ‘Mr.Zoo Keeper’ படம் வருகிற மே 3ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here