அழகை மெருகேற்ற அறுவை சிகிச்சை செய்த யாஷிகா.. ரசிகர்கள் கூறுவது உண்மை தானா?..

0
159

Yashika Anand: தமிழ் சினிமாவில் ‘இனிமே இப்படித்தான்’, ‘கவலை வேண்டாம்’, ‘துருவங்கள் பதினாறு’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் யாஷிகா ஆனந்த். 

தொடர்ந்து, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தில் நடித்ததற்குப் பிறகு யாஷிகா பரபரப்பாக பேசப்பட்டார். மேலும், பிக் பாஸில் கலந்துகொண்ட பிறகு ரசிகர்கள் அனைவரிடம் கவனம் பெற்றார். 

சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கிய யாஷிகா, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நிலையில் உடல் தேறினார். தொடர்ந்து அவர் படங்களில் நடிக்க தொடங்கினார். அவ்வப்போது கவர்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

இவற்றையெல்லாம் பார்த்த யாஷிகாவின் ரசிகர்கள், தனது அழகை மெருகேற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் அதனால் தான் விபத்திற்குப் பிறகும் அழகாக காணப்படுவதாக பேசி வந்துள்ளனர்.

இதனை கவனிந்த யாஷிகா ஆனந்த்,  ”நான் அழகுக்காக அறுவை சிகிச்சை எதையும் செய்யவில்லை” என வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தொடர்ந்து, இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here