மூலிகை மூலமாக சிறுநீர் கற்கள் கரையுமா???

0
110

இன்றைய காலகட்டதில் சராசரி 10% -12% மக்கள் சிறுநீர் கற்களால் பாதிக்கப்படுகின்றனர், இதற்கு நம் முன்னோர் காலத்தில் ஒரு சிறந்த மருந்தாக பூனை மீசை,நெருஞ்சில் முள் மற்றும் ரண கள்ளி போன்ற தாவரங்கள் பயன்பாட்டில் இருந்ததாக அகத்தியரின் மருத்துவ குறிப்பில் உள்ளது, இந்த இலையை கட்டி போட்டால் குட்டி போடும் தாவரம் என்றும் கூறுவார்கள் இது கள்ளி வகையை சேர்ந்தது இந்த இலையில் புளிப்பு சுவை இருக்கும்


ரணகள்ளி: சிறுநீரக கற்களை கரைக்க இந்த மூலிகை செடியின் இலை பயன்படுத்தபடுகிறது. சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை மிக எளிதாக கரைத்து சிறுநீர் கழிக்கும் போது எவ்வித வலியுமின்றி வெளியேற்றுகிறது. ரணகள்ளி இலைகளை 7 நாட்கள் மட்டும் சாப்பிட்டு வந்தால் நோய் பூரண குணம் அடையும். இந்த இலையை நாள் ஒன்றுக்கு ஒரு இலை என்ற சதவீதத்தில் சாப்பிட வேண்டும். இந்த இலையை முதல் நாள் சிறிது சாப்பிட வேண்டும். அடுத்த நாள் சற்று பெரிய இலை அதற்கு அடுத்த நாள் இன்னும் சற்று பெரிய இலை என்று படி படியாக சாப்பிட வேண்டும்


இந்த இலையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வர வேண்டும். பின்பு ஓரிரு டம்ளர் தண்ணீர் அருந்தி வர வேண்டும் இவ்வாறு செய்தால் சிறு நீரக கற்கள் வர வாய்ப்பே இல்லை. இந்த செடியை வீட்டிலும் வளர்க்கலாம்
மேலே குறிப்பிட்ட மூலிகைகள் உங்களுக்கு அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் பவுடர்களாக கிடைக்கும், இதை வாங்கி 5-7 நாட்கள், மூலிகைகளில் ஏதேனும் ஒன்றை மிதமான வெண்ணீரில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு கலந்து குடித்து வரவும், அப்படி வருபவர்களுக்கு, சிறுநீர் கற்கள் கரைந்து நிரந்தர தீர்வு கிடைக்கும், இந்த மூன்று மூலிகைகளில் மிகவும் சிறந்ததாக ரணகள்ளி அரியப்படுகிறது.


இதை சாப்பிடும் போது பாலும் பால் சார்ந்த பொருட்கள் மற்றும் இறைச்சி மீன் முட்டை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here