2022ஆம் ஆண்டு ஸ்டார்ட் அப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் – முதலமைச்சர் ஸ்டாலின்..

0
137

ஸ்டார்ட் அப் (Start Up) தரவரிசைப் பட்டியலின் 2022ஆம் ஆண்டில் முதலிடம் பெற்றுள்ளது. இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளாட்.

அதில், “ஸ்டார்ட் அப் (Start Up) தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018ஆம் ஆண்டில் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது திராவிட மாடல் ஆட்சியில் 2022ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது.

ANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 7ஆயிரத்து 600 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022ஆம் ஆண்டில் மட்டும் 2ஆயிரத்து 250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று.

இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கும் அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்.. இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here