அடேங்கப்பா இவ்வளவு வசதிகளா..! Royal Enfield Shotgun 650 ஜனவரியில் அறிமுகம்..!

0
178

மக்கள் மிகவும் விரும்பி வாங்கும் வாகனங்களில் மிக முக்கியமான ஒன்று ராயல் என்ஃபீல்டு பைக்குகள். இந்நிலையில், தற்போது ராயல் என்ஃபீல்டின் புதிய 650cc Shotgun பைக் வெளியாகியுள்ளது. இந்த பைக் 650cc எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், முன்னதாக Interceptor 650, Continental GT, Super Meteor 650 ஆகிய பைக்குகளும் இதே 650cc செக்மென்ட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த Shotgun 650 பைக் 3.80 லட்சம் ரூபாயில் தொடங்கி 4 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும், இந்த பைக்கில் ஒரு 648cc Parallel Twin சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பவர் 46.40 BHP மற்றும் 52.3 NM டார்க் திறன் கொண்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.

டூயல் சேனல் ABS வசதி, முன்பக்க Showa USD போர்க், பின்பக்கம் Showa ட்வின் ஷாக் வசதி உள்ளது. இந்த பைக்கின் முன்பக்கமும் மற்றும் பின்பக்கமும் 18/17 இன்ச் அலாய் வீல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீல்களின் முன்பக்க டிஸ்க் பிரேக்கில் 320mm , பின்பக்க டிஸ்க் பிரேக் 300mm கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பைக்கில் மொத்தம் Stencil White, Green drill, Plasma Blue, Sheet Metal Grey என நான்கு நிறங்களில் கொண்டுவரப்பட்டுள்ளன. 13.8 லிட்டர் டேங்க் அளவும், 240 கிலோ எடையும் கொண்டுள்ள இந்த பைக்கில் சிங்கிள் சீட் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

பயனர்களுக்கு வேண்டுமென்றால் அதனை கூடுதலாக ஒரு சீட்டை சேர்த்துக்கொண்டும் பயன்படுத்தமால் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பைக்கின் மீது ஆர்வம் கொண்டு ஆவலுடன் இந்த பைக்கை எதிர்பார்த்து காத்திருந்த பயனர்களுக்கு இது ஒரு அருமையான பைக்காக அமைந்திருப்பதில் எந்த மாற்றமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here