தமிழ்நாடு பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அதில், தமிழ்த் திரைத்துறையினரின் நீண்டநாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், “சென்னையை அடுத்த பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்க 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நவீன திரைப்பட நகரத்தில் வி.எப்.எக்ஸ், அனிமேஷன், புரொடக்ஷன் உள்ளிட்ட சகல வசதிகளும் இடம் பெறவுள்ளன” என தெரிவித்தார். இந்த அறிவிப்பிற்கு தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.