தளபதியின் கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம்? வெளியான தகவல்..!

0
104

Thalapathy 69: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் தொடர்பான தகவலும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

தெலுங்கில் இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் வெளிவந்த ‘RRR’ படத்தைத் தயாரித்தவர் டிவிவி தனய்யா, தற்போது விஜய்யின் 69ஆவது படத்தைத் தயாரிக்க இருக்கிறது.

ஆனால், இந்த படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. ‘தளபதி 69’ படத்தை இயக்குவது ‘வெற்றிமாறன்’, ‘கார்த்திக் சுப்பராஜ்’, ‘திரிவிக்ரம்’ என தொடர்ந்து பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டது.

சமீபத்தில் கூட ஆர்.ஜே.பாலாஜி இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயக்குநர் ஹெச்.வினோத் நடிகர் விஜய்யை சந்தித்து கதை கூறியிருக்கிறார்.

இந்த கதையை கேட்ட விஜய்க்கு கதை பிடித்துவிட்டதாம், உடனே பண்ணலாம் என கூறிவிட்டாராம். ஆனால், ஏற்கனவே திரிவிக்ரம் கூறிய கதையையும் விஜய் ஓகே பண்ணி வச்சிருக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டபோது, திரிவிக்ரம் வைத்து படம் எடுக்கலாம் என கூறியதாக தெரிகிறது. திரிவிக்ரம் ஒரு தெலுங்கு இயக்குநர், தயாரிப்பு நிறுவனமும் தெலுங்கு என்பதால் அவரை வைத்து படத்தை இயக்குவது எளிதாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால், விஜய் தரப்பில் ஹெ.வினோத் வைத்து படம் இயக்கலாம் எனவும் கூறப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், ‘தளபதி 69’ படத்தை இயக்கும் இயக்குநர் யார் என்பது குறித்து விரைவில் தெரியவரும் என கூறப்படுகிறது.

இருந்தபோதிலும், தற்போது இந்த படத்திற்கு விஜய்க்கு 250 கோடி சம்பளம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here