உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: நிறுவன தலைவர்கள் மகிழ்ச்சி..!

0
235

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நேற்று (ஜன.07) இன்றும் (ஜன.08) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொழில்துறையில் சாதனை படைக்கும் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து யூடியூபர் மதன் கௌரி கூறுகையில், “தமிழ்நாடு, முதலீட்டிற்கு இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக இருக்கிறது” என புகழாரம் தெரிவித்தார்.

மேலும், Fs India Devco நிறுவன இயக்குநர் ரூபா விஜய் கூறுகையில், “தமிழ்நாடு தொழில் முனைய சிறந்த மாநிலம் அதற்கு பல காரணிகள் உண்டு. அதிக திறமையசாளிகளை உள்ளடக்கிய மாநில தமிழ்நாடு.

இங்கு, நிறைய பெண் பொறியாளர்கள் மற்றும் அதிகப்படியான பெண்கள் உறுபத்தி துறைக்கு ஏதுவாக இருக்கின்றனர். தமிழ்நாட்டின் கடல்சார் போக்குவரத்து தொழிலில் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

Blue Print Energy நிறுவன நிர்வாக இயக்குநர் உலக மணி கூறுகையில், “பெண்களுக்கு தொழில் துறையில் சுதந்திரமாக வாய்ப்பளிக்கும் அரணாக தமிழ்நாடு அரசு இருக்கின்றது” என புகழாரம் தெரிவித்தார்.

மேலும், “புத்தணர்வு மிக்க முதலீட்டாளர்கள் சந்திப்பு இன்று தமிழ்நாட்டில் அதுவும் நமது சென்னையில் இருப்பது மிக்க மகிழ்ச்சி. தமிழ்நாடு முதலீட்டுக்கு ஏற்ற தொழில் தொடங்க சிறந்த மாநிலமாகும். 42 விழுக்காடு பெண்கள் தொழிலை முன் நின்று நடத்தும் இந்தியாவின் முதன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது” என கூறியுள்ளனர்.

மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 தொடங்கிய முதல் நாளிலேயே ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: முதல் நாளில் ரூ.5.5 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here