‘Today Gold rate’ : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

0
157

Today Gold rate : கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் இன்றைய நிலவரம் குறித்து காணலாம்..

சென்னையில், டிசம்பர் 16ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் டிசம்பர் 19ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 20ஆம் தேதி மீண்டும் உயர்ந்தது. இந்த வரிசையில் இன்று (டிச.23) மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

22 காரட் தங்கத்தின் விலை:

ஆபரண தங்கமான 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,875க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை:

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,813க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,504க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.80.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here