14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசியல்.. சிவசேனாவில் இணைந்த நடிகர் கோவிந்தா.. எந்த தொகுதியில் போட்டி?..

0
50

Actor Govinda: பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா, 2004ஆம் ஆண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அப்போது, காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு, பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ராம் நாயக்கை தோற்கடித்தார்.

அதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பாக மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். தொடர்ந்து 2009ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

அதன்பிறகு தான் அரசியலில் இருந்து விலகுவதாக கூறி தனது அரசியல் பயணத்தை முடித்துக்கொண்டார். இந்த நிலையில் தற்போது 14 ஆண்டுகளுப் பிறகு மீண்டும் அரசியலில் களம் இறங்கியுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் அவர் இணைந்துள்ளார். இது குறித்து கோவிந்தா கூறுகையில், “2004-2009ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகிவிட்டேன். மீண்டும் அரசியலுக்கு வருவேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.

ஆனா, தற்போது சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசியலில் இறங்கியுள்ளேன். இந்த முறை எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் கலை மற்றும் கலாசாரம் துறையில் பணியாற்றுவேன்” என கூறியுள்ளார்,

சிவசேனா கட்சியில் இணைந்துள்ள நடிகர் கோவிந்தா இந்த நாடாளுமன்ற தேர்தலில் வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here