தருமபுரியில் நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டம் – ஸ்டாலின் பங்கேற்பு..!

0
58

CM Stalin: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் போட்டியிடும் ‘இந்தியா’ கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

இந்த நிலையில் தருமபுரி அருகேவுள்ள தடங்கம் கிராமத்தில் உள்ள பி.எம்.பி. மைதானத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here