‘உங்களது திட்டங்களை தொடங்கி வைக்க மட்டும் மோடி வேண்டுமா?’ – திமுகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி..!

0
97

Edappadi Palanisami: மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக தேர்தல் பணிமனையை எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கூட்டணியில் இருந்து வெளியே வந்தால் தவறு இருந்தால் விமர்சிப்போம். கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்கிறது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகும் அது குறித்து விமர்சனம் செய்வது தவறானது.

மக்களுக்கு விரோதமான திட்டங்களை கூறினால், அதனை கட்டாயம் விமர்சிப்போம். மோடியிடம் நேரில் சரணாகதி, வெளியில் வீரவசனம் பேசுவதே திமுகவின் கொள்கையாக இருக்கிறது.

அவர்களுக்குத் தேவையான திட்டங்களை தொடங்கி வைப்பதற்கு மட்டும் பிரதமர் மோடியை திமுகவினர் அழைக்கின்றனர். பின்னர் அவர்களே மோடியை விமர்சிக்கின்றனர்” என குற்றம்சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here