‘ப்ரீத்திக்கு நான் கேரண்டி’ – மோடியை கலாய்த்த மு.க.ஸ்டாலின்..!

0
144

MK Stalin: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து தங்களது கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் கேள்வி எழுப்பும் விதமாக தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ப்ரீத்திக்கு நான் கேரண்டி என்ற விளம்பரம் போல் கேரண்டி விளம்பரம் கொடுக்கும் பிரதமர் மோடி அவர்களே, உங்கள் கேரண்டிகளின் லட்சணம் என்ன? கருப்புப் பணத்தை மீட்டு எல்லா இந்தியர்களின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாயைப் போட்டுவிட்டீர்களா?

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிவிட்டீர்களா? பிரதமர் மோடி இப்படி என்றால், இங்கே இருக்கும் பழனிசாமியோ, நாங்கள் ஏன் ஆளுநரை எதிர்க்க வேண்டும்? என்கிறார்.

பழனிசாமி அவர்களே, ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் நீங்களும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஒரு அங்கம்தானே! சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் ஆளுநரைக் கூட எதிர்க்க முதுகெலும்பற்ற நீங்களா பிரதமர் மோடியை எதிர்ப்பீர்கள்?” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here